Categories: சினிமா

அப்பா அம்மாவின் 70வது திருமண நாள்..! கோலாகலமாக கொண்டாடிய மகள் சுஹாசினி மணிரத்தினம்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் படத்தின் மூலம் துணை இயக்குனராக பணியாற்றி சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் சுஹாசினி. சினிமா பின்னணியை கொண்டு இருந்தாலும் தனது உழைப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்து இருக்கிறார் சுஹாசினி. இவர் தமிழில் நடிகையாக அறிமுகமாகிய படம் நெஞ்சத்தை கிள்ளாதே. இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்த நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைத்தது.

அப்பா அம்மாவின் 70வது திருமண நாள்..! கோலாகலமாக கொண்டாடிய மகள் சுஹாசினி மணிரத்தினம்..! 1

இவர் நடிப்பில் வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்ற நிலையில், முன்னணி நடிகையாக சினிமாவில் உருவெடுத்தார். பல நடிகர்களுடனும் சுஹாசினி படங்கள் நடித்து உள்ளார். சினிமாவில் பிரபல நடிகையாக வந்த இவர், இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மகன் ஒருவர் உள்ளார்.

தற்போது இவர் தந்தையும் நடிகருமான சாருஹாசன் 70வது திருமண நாளை கொண்டாடி உள்ளார். மகள் சுஹாசினி அம்மா அப்பாவின் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடி அசத்தி உள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் சாருஹாசன் மற்றும் அவரது மனைவிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்