Categories: சமூகம்

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு!

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

சமகாலத்தில் தினசரியாக நம்மை வந்து சேரும் செய்தி பாலியல் வன்கொடுமை தொடர்பானதாக இருக்கும். கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். தலைநகரில் நடந்த இந்த சம்பவம் நாடும் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி, போராட்டம் வெடித்தது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு! 1

அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளுவதற்கு முன்னரே பாலியல் செய்திகள் அதிகரிக்க தொடங்கியது. இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளை அரசும், உச்சநீதி மன்றமும் முன்னெடுத்தது. அதன் விளைவாக சட்டம் இயற்றப்பட்டன.

இவ்வாறு பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை தடுக்க நினைத்த அடுத்த வினாடி குழந்தைகள் மீதான பாலியல் அச்சுறுத்தல்கள் அதிகரித்தன. இத்தனையும் சமாளித்த நிர்வாகம் போக்சோ என்னும் சட்டத்தை கொண்டு வந்தது. இது மட்டுமின்றி பல்வேறு அரசாங்கங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குற்றத்தை தடுக்க தனி பிரிவு, இலவச எண் என அறிமுகப்படுத்தி இருந்தாலும் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

இந்த வகையில், கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2018ல் 40,810 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இது 2017ல் 33,210ஆக இருந்துள்ளது. அதாவது 1.3 சதவிகிதங்கள் அதிகரித்துள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்