‘Mr. மனைவி’ சீரியலில் இருந்து விலகிவிட்டேன். இதுதான் காரணம்.! உண்மைகளை உடைத்த ஷபானா

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் இருந்து ஹீரோயின் விலகி விட்டதாக அறிவித்திருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ என்ற சீரியலின் மூலமாக மக்கள் மனங்களில் இடம்பிடித்த நடிகை தான் ஷபானா. இந்த சீரியலில் வேலைக்காரியாக நடித்து பின்னர் வீட்டின் உரிமையாளர் மகனையே திருமணம் செய்து கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘செம்பருத்தி’ சீரியல் திடீரென ஒரு நாள் முடிவுக்கு வந்தது.

'Mr. மனைவி' சீரியலில் இருந்து விலகிவிட்டேன். இதுதான் காரணம்.! உண்மைகளை உடைத்த ஷபானா 1

அதன் பின்னர் அவருக்கு சீரியல் நடிகர் ஆரியனுடன் திருமணமானது. திருமணம் முடிந்த கையோடு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மிஸ்டர் மனைவி’ என்கிற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். 300 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பவன் ரவீந்திரா ஹீரோவாக நடிக்க, ஷபானா அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வந்தார். இவர்களுடன் அனுராதா, ரஞ்சிதம் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஷபானா இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

“‘மிஸ்டர் மனைவி’ சீரியலை விட்டு விலகுவது என்ற முடிவு மிக கடினமானது. இருப்பினும் சில காரணத்தால் நான் விலகுகிறேன். அஞ்சலி கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு, எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. புதிய ப்ராஜெக்ட் மற்றும் புதிய கதாபாத்திரம் காரணமாக இந்த சீரியலை விட்டு விலகுகிறேன். உங்களிடம் இருந்து ஷபானா என்கிற அஞ்சலி விடைபெறுகிறேன். நன்றி” என பதிவிட்டு இருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்