ஜவ்வு போல் இழுக்கும் சீரியல்..தொடர்ந்து விலகும் நடிகர்கள்.. செம்பருத்தி சீரியலில் இருந்து விலகி கணவருடன் புது சீரியலில் இணையும் ஷபானா

வெளியிட்டது

முன்பெல்லாம் மெகா தொடர்கள் என்றாலே 500 எபிசோடுகளை தாண்டாது. 1 வருடம், 2 வருடங்களுக்குள் நாடகத்தை முடித்துவிடுவார்கள். ஆனால் தற்போதெல்லாம் 5 வருடங்கள் ஆனாலும் சீரியலை முடிப்பதாக தெரியவில்லை. அது போன்ற ஒரு தொடர்தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “செம்பருத்தி” சீரியல். கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய அந்த சீரியல் தற்போது 2022ம் ஆண்டை கடந்தும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆதி என்ற கதாபாத்திரத்தில், ஹீரோவாக கார்த்திக் என்பவரும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக சபானாவும் நடித்துக் கொண்டிருந்தனர். மற்றொரு சீரியலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சீரியலை பார்த்து வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்வது போன்ற கதை.

ஜவ்வு போல் இழுக்கும் சீரியல்..தொடர்ந்து விலகும் நடிகர்கள்.. செம்பருத்தி சீரியலில் இருந்து விலகி கணவருடன் புது சீரியலில் இணையும் ஷபானா 1

ஆரம்பத்தில் ஆதி பார்வதி திருமணத்தில் தொடங்கி, விறுவிறுப்பாக போய் கொண்டிருந்தது இந்த சீரியல்.
இந்த சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் ஒரு நாள் திடீரென நாடகத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் இந்த நாடகத்தின் மவுசு குறைந்துவிட்டது. அக்னி என்பவர் ஆதி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் சீரியல் அவ்வளவு மும்முராக செல்லவில்லை. இந்த நிலையில் சபானாவுக்கு பாக்கியலெட்சுமி சீரியலில் நடித்து வந்த செழியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது சபானாவும் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரும் செழியனும் இணைந்து சன் டிவியில் புதிதாக தொடங்கவுள்ள சீரியலில் நடிக்க உள்ளதால் இவரும் செம்பருத்தி சீரியலில் இருந்து விலக உள்ளதாக தெரிகிறது. ஆதி கதாபாத்திரத்தில் நடத்துக் கொண்டிருந்த கார்த்திக் விலகிய போதே சீரியலின் டி.ஆர்பி ரேட்டிங் குறைந்து விட்ட நிலையில் தற்போது சபானாவும் விலகி விட்டால் சீரியல் என்ன ஆவது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். தற்போது இவர் கணவர் ஆர்யனுடன் இணைந்து சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புது தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிகிறது .

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்