கால்பந்து போட்டியை காண சென்ற அஜித்குமாரின் மனைவி ஷாலினியை தேடி வந்து அபிஷேக் பச்சன் பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். தமிழ் திரையுலகில் கியூட் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் அஜித் மற்றும் ஷாலினி. இந்த தம்பதிகளுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படங்களில் பிஸியாக நடித்து வரும் தல அஜித் குமாரின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருவது வைரலாகி வருகிறது. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய ஷாலினி தல அஜித்துடன் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தனது மகன் ஆத்விக்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
சென்னையில் ஐஎஸ்எல் கால் பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போலவே ஐஎஸ்எல் லீக் என்கிற கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. சென்னையின் எப்சி என்கிற அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் தல தோனி ஆகியோர்களுக்கு சொந்தமானது இந்த அணி. சென்னையின் பெயரை கொண்டுள்ளதால் இதற்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.
இந்த போட்டிகளை பார்ப்பதற்காக தற்போது தன் மகன் ஆத்விக்கை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார் ஷாலினி. சென்னையின் எப்சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் என்கிற இரண்டு அணிகள் விளையாட இருந்த அந்த போட்டியை பார்ப்பதற்காக வந்த ஷாலினி மற்றும் அஜித் மகன் ஆத்விக்இருவரும் வருகை தந்து இருந்தனர். ஆத்விக் சென்னையின் எப்சி டி-ஷர்ட் அணிந்து இருக்கும் புகைப்படங்கள் அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதில் சென்னையின் எப்சி அணியின் தலைவராக இருக்கும் அபிஷேக் பச்சன் ஷாலினியை தேடி வந்து நலம் விசாரித்துள்ளார். மேலும் அஜித் மகன் ஆத்விக்கின் மகனையும் கொஞ்சி விளையாடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O