Categories: சினிமா

கணவர் அஜித்தின் துணிவு படத்தை பார்க்க முதல் ஆளாக ஓடி வந்த மனைவி ஷாலினி.! புகைப்படங்கள் இதோ

வெளியிட்டது

தனது கணவர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தை பார்ப்பதற்காக அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி சென்னையில் உள்ள 4 பிரேம்ஸ் திரையரங்கிற்கு இன்று வருகை புரிந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திரையரங்கில் பிர்வியூ ஷோ பார்த்து மகிழ்ந்து விழுந்தார் ஷாலினி. பின்னர் அஜித் ரசிகர்களுடன் அவர் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் படம்தான் துணிவு. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 11ஆம் தேதி உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்குமார் – ஹெச்.வினோத் – போனி கபூர் ஆகியோர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

கணவர் அஜித்தின் துணிவு படத்தை பார்க்க முதல் ஆளாக ஓடி வந்த மனைவி ஷாலினி.! புகைப்படங்கள் இதோ 1

இந்தப் படத்தில் இருந்து ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு குத்துப் பாடல்களுக்கு தல அஜித் குமார் மரண மாஸ் ஆக நடனம் ஆடி இருந்தார். இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி பி முத்து போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதை பார்க்கும் பொழுது வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதில் அஜித் குமார் வெள்ளை நிற தலைமுடியுடன் வெள்ளை நிற தாடியுடன் கண்ணாடி மற்றும் துப்பாக்கி என்று செம ஸ்டைலாக காட்சியளிக்கிறார். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ட்ரைலர் வெளியாகி சில தினங்களில் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்திருந்தது.

சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் என நிறைந்திருக்கும் இந்த படம் வெளியாகும் தினத்தை அஜித் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாட இருக்கிறார்கள். இன்று அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மேனேஜர் செரேஷ் சந்திரா மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் படத்தின் ப்ரிவ்யூ ஷோவை பார்ப்பதற்காக இன்று காலையில் சென்னையில் உள்ள 4 பிரேம்ஸ் திரையரங்கிற்கு வந்தனர். அப்போது அஜித் ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஷாலினி மற்றும் அவரது உறவினர்களின் முகத்தில் மகிழ்ச்சி இருந்தது. இதனால் படம் வேற லெவலில் வந்திருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்