‘இலக்கியா’ சீரியலில் இருந்து விலகிய ஹிமா பிந்து.! இனி இவருக்கு பதில் இவர்.! யாருனு பாருங்க.!

வெளியிட்டது

‘இலக்கியா’ சீரியலில் இருந்து நடிகை ஹீமா பிந்து விலகிய நிலையில் தற்போது புதிய இலக்கியாவாக யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ‘இலக்கியா’ இந்த சீரியலில் நந்தன் லோகநாதன் ஹீரோவாக நடித்து வர, நடிகை ஹீமா பிந்து ஹீரோயினாக நடித்து வந்தார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘இதயத்தை திருடாதே’ என்கிற சீரியலில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் மக்களிடையே கிடைத்த வரவேற்பு காரணமாக சன் தொலைக்காட்சிக்கு திரும்பினார். இந்த சீரியலில் அவருக்கு ‘இலக்கியா’ என்கிற கதாபாத்திரம் கிடைத்தது. கௌதம் மற்றும் இலக்கியா இருவருக்காகவே பலரும் இந்த சீரியலை விரும்பிப் பார்த்தனர்.

'இலக்கியா' சீரியலில் இருந்து விலகிய ஹிமா பிந்து.! இனி இவருக்கு பதில் இவர்.! யாருனு பாருங்க.! 1
இந்த நிலையில் சமீபத்தில் இலக்கியா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் ஹீமா பிந்து. அதற்கு முக்கிய காரணமாக அவர் கூறியது, “தனக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருவதால் தன்னால் இரண்டையும் சரிவர பேலன்ஸ் செய்ய முடியவில்லை. தன்னால் பிற கலைஞர்களுக்கும் கஷ்டமாக இருக்கிறது. தான் ஷூட்டிங் வரும் நேரம் பிற கலைஞர்களும் ஷூட்டிங் வரும் சூழல் இருக்கிறது. எனவே தன்னால் யாருக்கும் பிரச்சனை வேண்டாம்” என்று சொல்லி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். ஆனால் அவர் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தான் விலகுவதை உறுதியாக அறிவித்துவிட்டார் ஹீமா. எனவே அவருக்கு பதிலாக யார் நடிக்க இருக்கிறார் என்கிற கேள்வி எழுந்தது.


தற்போது ஹீமா பிந்துவிற்கு பதிலாக நடிகை ஷாம்பவி குருமூர்த்தி இனி புது இலக்கியவாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ‘வணக்கம் தமிழா’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் ‘கேளடி கண்மணி’ , ‘செவ்வந்தி’ போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ‘கயல்’ சீரியலின் தெலுங்கு பதிப்பான ‘சாதனா’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த்தார் ஷாம்பவி. தற்போது அந்த சீரியல் பாதியிலேயே முடிக்கப்பட்டதால் ‘இலக்கியா’ சீரியலில் புது இலக்கியவாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பலரும் ஷாம்பவிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்