Categories: சினிமா

ஷங்கர் மகள் அதிதிக்கு அடித்த ஜாக்பாட்.! மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி ஆனார்

வெளியிட்டது

கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகியிருக்கிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. தற்போது அவர் இரண்டாவது படமாக சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் இயக்குனர் சங்கர். இவரின் இளைய மகள் தான் அதிதி. மருத்துவம் படித்து இருந்த போதிலும் திரைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், விருமன் படத்தில் கமிட் ஆகி இருந்தார். இந்த படத்தில் மதுரைக்கார பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார் அதிதி. மேலும் இந்த படத்தின் பாடல்களில் இவர் தாவணி சேலையில் போடும் ஆட்டத்தை பார்த்து பலரும் அதிதியின் விசிறிகள் ஆகிவிட்டனர். மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள விருமன் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

ஷங்கர் மகள் அதிதிக்கு அடித்த ஜாக்பாட்.! மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி ஆனார் 1

விருமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அதிதி பாவடை தாவணியில் தோன்றியதால் இவருக்கு என தனி ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. மேலும் சிம்பு நடிக்க உள்ள அடுத்த படமான கொரோனா குமார் என்ற படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் அதிதி. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற இவர் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைக்க உள்ளார் ஏற்கனவே மருத்துவரான சாய் பல்லவி தமிழ் திரையுலகை கலக்கி வரும் நிலையில் அடுத்த டாக்டர் ஹீரோயினாக கலக்க உள்ளார். தற்போது அதிதி நடிக்கும் இரண்டாவது படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மண்டேலா படத்தை இயக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள படம் தான் மாவீரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு அதிதி கமிட் ஆகியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பட பூஜையுடன் தொடங்கியது. இதில் யோகிபாபு, மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தனது முதல் இரண்டு படங்களிலேயே முண்ணனி நடிகர்களான கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து நடிக்கவுள்ள அதிதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. Twitter original source from: Aditi Shankar

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்