நடிகர் சங்கத்திலிருந்து பாக்யராஜை நீக்கியது குறித்து சாந்தனு காட்டமாக ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர் மறைமுகமாக நடிகர் சங்க நிர்வாகிகளை தாக்கி பேசியிருக்கிறார் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பாக்கியராஜ். இவர் 80களில் மிகப்பெரிய நடிகராக இருந்தார். இவர் நடிகர் சங்கத்திலும் ஒரு குறிப்பிட்ட நபராக பார்க்கப்படுகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இரு அணிகளாக போட்டியிட்ட நடிகர்கள், நாசர் தலைமையில் பாண்டவர் என்ற ஒரு அணியிலும், பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் என்ற அணியிலும் போட்டியிட்டனர். இதில் பதிவான வாக்குகள் கடந்த மார்ச் மாதம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. பெரும்பாலான பதவிகளையும் அவர்களே கைப்பற்றினார். அதன்படி நடிகர் சங்கத்தின் தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக நடிகர் கார்த்தியும் இருக்கின்றனர். இவர்கள் பதவி ஏற்றது முதலே எதிரணியினர் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பிய வந்தனர். தொடர்ந்து சண்டை சச்சரவு என்று நடிகர் சங்கம் பிரச்சினைகளையே சந்தித்து வந்தது. நலிந்த கலைஞர்களுக்கு உதவி கூட செய்ய முடியாமல், இந்த பிரச்சனையிலேயே நாட்கள் நகர்ந்து வந்தது. மேலும் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவோம் என்று கூறி அளித்த வாக்கை ஜெயித்தவர்கள் நிறைவேற்றவில்லை என்று எதிரணியினர் புகார் தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே பாக்யராஜ் நடிகர் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டார் என்று கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே செயற்குழு கூடி நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து பாக்யராஜை நீக்குவதாகவும், 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பாக்யராஜ் நடிகர் சங்கத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாக்யராஜின் மகன் சாந்தனு ட்விட்டரில் கடுமையாக விமர்சனம் ஒன்றை செய்துள்ளார். அதில் எவ்வளவு கீழே இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பார்க்கிறீங்க, உங்களை திருத்த முடியாது என்று பதிவிட்டுள்ளார். பாக்யராஜை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கிய விஷால், கார்த்தி மீது சாந்தனு கோபமாக இருப்பதால் தான் இப்படி மறைமுக விமர்சனத்தை கூறியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த ட்வீட்டை பார்த்த சிலர் இது பொன்னியின் செல்வன் படத்துக்கு எதிராக ஷாந்தனு கருத்து தெரிவித்ததாகவும், ப்ளூ சட்டைக்கு எதிராக போட்ட ட்வீட் என்றும் கிளப்பி விட்டுள்ளனர். அதை பார்த்த ஷாந்தனு இது எந்த படத்திற்கும், எந்த ரசிகர்களுக்கும், எந்த விமர்சனம் செய்பவர்களுக்கும் எதிரானது இல்லை என்று மீண்டும் ஒரு பதிவிட்டுள்ளார். அப்போ இது நடிகர் சங்கத்துக்கு சொன்னது தானே?