பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் எலிமினேஷனாக வெளியேறிய சாந்தி மாஸ்டர் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கடந்த ஒன்பதாம் தேதி முதல் தொடங்கி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 6. எப்போதும் இல்லாத அளவிற்கு தொலைக்காட்சியில் ஒரு மணி நேரமும், டிஸ்னி ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரம் லைவ்வாக பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் எப்போதும் 16 முதல் 18 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த முறை அதிகபட்சமாக 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஜி.பி. முத்து தனக்கு மன அழுத்தம் இருப்பதாக கூறி தானாக முன்வந்து வெளியேறி விட்டார். எனவே இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று பலரும் எண்ணி வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நடன இயக்குனர் சாந்தி வெளியேற்றப்பட்டார்.

பிரபல நடன இயக்குனராக இருந்தவர் சாந்தி. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் ஃபேவரைட் ஆன பாடலான அம்மி அம்மி அம்மி மிதித்து என்று மெட்டி ஒலியில் வரும் பாடலுக்கு நடனமாடியதன் மூலமாக பலருக்கும் இவர் அறிமுகமானார். தற்போது இவர் பல நாடகங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு என்கிற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் சிறு பிள்ளையாக இருந்த போது இவரின் தாய் சென்னைக்கு ஆந்திராவில் இருந்து வந்துள்ளார். பின்னர் சாந்தியின் தந்தை இவரது தாயை விட்டுவிட்டு சென்ற பின்பு, மூன்று பெண் குழந்தைகளுடன் இவரது தாய் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் ஒருவர் இவர்களை காப்பாற்றி ஆதரவு கொடுத்துள்ளார். அதன் பின்னர் 13 வயதில் நடனத்தை முறையாக கற்றுக் கொண்டு நடன இயக்குனராக உயர்ந்திருக்கிறார் சாந்தி. இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸில் எப்போதும் ஒரு வழக்கம் உண்டு. வயதில் அதிகமான இரண்டு அல்லது மூன்று பேரை எடுத்து அவர்களை முதல் மூன்று வாரங்களில் வெளியேற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது பிக்பாஸ். அந்த வகையில் இந்த முறை வயது அதிகமானவர்களில் ராபர்ட் மாஸ்டர், ஜி.பி முத்து, சாந்தி மாஸ்டர் என்று மூன்று பேரை எடுத்திருந்தது. இதில் ஜிபி முத்து தானாக முன்வந்து விலகி விட, சாந்தி மாஸ்டரை இந்த வாரம் வெளியேற்றி இருக்கிறது பிக்பாஸ். ஜிபி முத்து வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று பலரும் எண்ணியிருந்த நிலையில் சாந்தியை அதிரடியாக வெளியேற்றி இருக்கிறது பிக்பாஸ் டீம். இதனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை 19 ஆக குறைந்திருக்கிறது. முதல் எலிமினேஷனாக வெளியேறிய சாந்தி மாஸ்டர் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.