கமல் கார் கொடுக்கவே இல்ல.! இதுதான் நடந்துச்சு.! உண்மைகளை போட்டு உடைத்த ஷர்மிளாவின் தந்தை

வெளியிட்டது

சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக தலைப்புச் செய்தியாக இருந்து வரும் ஒரு செய்தி தான் கோயமுத்தூரை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளாவின் பணி நீக்கம் குறித்த செய்தி. நேற்று இவருக்கு கமலஹாசன் கார் பரிசளித்திருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது கமல் கார் வழங்க வில்லை என்று ஷர்மிளாவின் தந்தை கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இளம் வயதிலேயே மிக குறுகலான பாதைகளில் பேருந்தை ஓட்டியதன் மூலமாக மிகப் பிரபலமானவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா. இவருடைய திறமையை பாராட்டுவதற்காகவும், ஊக்கமளிப்பதற்காகவும் அரசியல்வாதிகள் பலரும் இவரது பேருந்தில் பயணம் செய்தனர். அந்த வகையில் கடந்த வாரம் தூத்துக்குடியின் எம்.பி கனிமொழி இவரது பேருந்தில் பயணம் செய்தார். அப்போது நடத்துனர் கனிமொழியிடம் டிக்கெட் கேட்டதால் ஷர்மிளாவிற்கும் நடத்துனர் பெண்மணிக்கும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஷர்மிளா அந்த பணியில் இருந்து தன்னை நீக்கி விட்டதாக பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கமல் கார் கொடுக்கவே இல்ல.! இதுதான் நடந்துச்சு.! உண்மைகளை போட்டு உடைத்த ஷர்மிளாவின் தந்தை 1

கனிமொழி ஏற்கனவே தன்னுடைய பேருந்தில் பயணம் செய்ய இருக்கிறார் என்பதை முன்கூட்டியே தெரிவித்த பிறகும் தனக்கு பேருந்து மேலாளர் அனுமதி வழங்கவில்லை என்று ஷர்மிளா கூறினார். மேலும் கனிமொழியும் அவர்களுடன் பயணித்தவர்களும் டிக்கெட் எடுத்திருந்த போதிலும் பயிற்சி நடத்தினர் கனிமொழியிடம் டிக்கெட் கேட்டதால் கனிமொழி பாதியிலேயே இறங்கி விட்டதாகவும், அது தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் ஷர்மிளா பேசியிருந்தார். மேலும் கால் டாக்ஸி அல்லது ஆட்டோ ஓட்டி இனி தன்னுடைய பிழைப்பை நடத்திக் கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று கமலஹாசன் ஷர்மிளாவை அழைத்து கார் வாங்கி கொள்ள 10 லட்சம் ரூபாயை வழங்கியதாக செய்திகளில் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் ஷர்மிளாவின் தந்தை கமலஹாசன் கார் எதுவும் வழங்கவில்லை என்கிற அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்.


கமலஹாசன் மூன்று லட்ச ரூபாய் காசோலையை கொடுத்து இதை வைத்து கார் வாங்கிக் கொள்ளும்படி மட்டுமே கூறியதாக ஷர்மிளாவின் தந்தை கூறினர். மேலும் உங்களைப் போன்ற பெண்கள் முன்னுக்கு வரவேண்டும் என்று சொல்லி ஊக்கப்படுத்தும் விதமாக அவர் அந்த காசோலையை வழங்கினார், ஆனால் செய்திகளின் கூறப்படுவது போல பத்து லட்ச ரூபாய் எதுவும் தரவில்லை, வேண்டுமென்றால் அவர் வழங்கிய அந்த காசோலை வீட்டில் தான் இருக்கிறது நான் வேண்டுமானால் போட்டோ எடுத்து அனுப்புகிறேன் என்று ஷர்மிளாவின் தந்தை பேசியிருந்தார். மேலும் கமலை தான் தனது மனைவி, மகன்கள், மகள் என அனைவரும் சென்று சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியிருந்தார். அவர் பேசிய அந்த காணொளியை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Metro Mail

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்