சிகப்பு நிற உடையில் ரஞ்சிதமே பாடலுக்கு ஷிவானி ஆடியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஷிவானி நாராயணன் 21 வயதே நிரம்பிய இவர் ஒரு மாடல் மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சி நடிகை ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொலைக்காட்சியில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்றார். மேலும் விஜய் தொலைக்காட்சி தொடர்களான கடைக்குட்டி சிங்கம் மற்றும் ரெட்டை ரோஜா ஆகிய இரு தொடர்களிலும் நடித்தார். அதன் காரணமாக பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் மற்றும் இவரின் காதல் மிக பிரபலம் ஆனது. இந்த புகழ் காரணமாக, அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. கமல் நடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்துள்ளார் ஷிவானி. இதுதவிர விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்திலும் ஷிவானி போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார் ஷிவானி.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி, எப்போதும் தான் ஆடும் டான்ஸ் வீடியோவை வெளியிடுவது வழக்கம். கிளாமர் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் அவரது வீடியோக்களை பல லட்சம் பேர் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இன்று அவர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பாக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது. அதை நீங்களும் காண.. Watch the Below Video…