Categories: சினிமா

லண்டனில் துவங்கியது துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங்!

வெளியிட்டது
லண்டனில் துவங்கியது துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங்! 1

விஷால்- மிஷ்கின் கூட்டணியில் கடந்த 2017ம் ஆண்டு வெளியானது துப்பறிவாளன். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. அதில் விஷால் கணியன் பூங்குன்றன் என்ற துப்பறியும் நிபுணர் நடித்து இருந்தார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இதில் ஹீரோயினாக ஆஷ்யா ஒப்பந்தம் ஆகியுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசையமைக்க ஒப்புக் கொண்டார்.

மேலும் ‘துப்பறிவாளன்’ படம் மூலம் அனு இம்மானுவேல் என்பவரை கோலிவுட்டிற்கு அறிமுகப்படுத்திய மிஷ்கின், தற்போது இரண்டாம் பாகம் மூலம் ஆஷ்யாவை அறிமுகப்படுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.துப்பறிவாளன் 2 படத்தில் பிரசன்னா, ரகுமான், கெளதமி ஆகியோர் விஷாலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 4) லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் லண்டனில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் போல் இரண்டாம் பாகமும் வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்