CWC சீசன் 4-ன் டைட்டில் வின்னர் மைம் கோபி இல்லையா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்.!

வெளியிட்டது

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று குக் வித் கோமாளி சீசன் 4-ன் மாபெரும் இறுதிக்கட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. மூன்று மணிக்கு தொடங்க இருக்கும் இந்த நிகழ்ச்சி தொடர் 5 மணி நேரமாக தற்போது ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் ஃபைனலில் வெற்றி பெற்றது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மைம் கோபி வெற்றி பெற்றார் என்று வெளியான நிலையில் தற்போது அதில் உண்மை இல்லை, அவருக்கு பதிலாக இவர் தான் வெற்றி பெற்றுள்ளார் என்கிற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

CWC சீசன் 4-ன் டைட்டில் வின்னர் மைம் கோபி இல்லையா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்.! 1

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக நான்கு சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி. தற்போது நான்காவது சீசனையும் விரைவில் முடித்து பிக் பாஸ் சீசன் 7 பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த நடப்பு சீசனில் முதலில் பத்து போட்டியாளர்களும் பின்னர் இரண்டு போட்டியாளர்கள் என்று மொத்தம் 12 போட்டியாளர்கள் சமைக்கத் தொடங்கினர். இதில் 7 போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டு ஐந்து போட்டியாளர்கள் இறுதிக்கு தகுதியாகி இருந்தனர். சிருஷ்டி மைம் கோபி, விசித்ரா, சிவாங்கி, கிரண் என 5 போட்டியாளர்கள் தேர்வாண நிலையில் எலிமினேட் ஆகி சென்ற ஆன்ட்ரியன் மீண்டும் வைல்ட் கார்டு மூலமாக உள்ளே என்ட்ரி கொடுத்தார்.

இந்த நிலையில் இந்த வாரம் இறுதி சுற்று நடைபெற்று இருக்கிறது. எப்போதும் மொத்தம் மூன்று ரவுண்டுகள் வைத்து தான் எப்பொழுதும் வெற்றியாளரை தேர்வு செய்வார்கள். ஆனால் இந்த முறை வித்தியாசமாக 2 சுற்றுகளில் வெற்றியாளரை தேர்வு செய்யப் போவதாக நடுவர் வெங்கடேஷ் பட் அறிவித்திருந்தார். மேலும் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம் என்று ஐம்பூதங்கள் அடிப்படையில் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டிருந்தது. இறுதிச்சுற்றுக்கு சிறப்பு விருந்தினர்களாக பிரியங்கா, மாகாபா ஆனந்த், இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் வருகை தந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் மூலமாக தங்களுக்கு கிடைத்த பெயர் மற்றும் புகழ் குறித்து போட்டியாளர்கள், கோமாளிகள், நடுவர்கள் என அனைவரும் கண்ணீருடன் பேசி இருந்தனர்.

 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக மைம் கோபி தான் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்று தகவல் கசிந்து இருந்தது. தற்போது புதிய தகவலின் படி மைம் கோபி வெற்றி பெறவில்லை, சிருஷ்டி தான் முதலிடத்தை பிடித்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. ஆரம்பத்தில் சமைக்கவே தெரியாமல் இருந்த சிருஷ்டி தற்போது டைட்டிலை வென்றிருப்பதாக வரும் தகவல்கள் குக் வித் கோமாளி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சி முடிகிறதே என்று ரசிகர்கள் பலரும் வருத்தத்திலும் இருந்து வருகின்றனர்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்