நடிகை ஸ்ருதிஹாசனுக்கு ஹார்மோன் பாதிப்பால் கர்ப்பபை வீக்கம், கருப்பை கட்டிகள் போன்ற பாதிப்பால் அவதிப்படுவதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உலகநாயகன் கலஹாசனின் மூத்த மகள்தான் ஸ்ருதிஹாசன். குழந்தையாக இருக்கும் போதே தேவர்மகன் படத்தில் நடித்து அசத்தியிருப்பார். பின்னர் 2011ம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை சாந்தனு ஹசரிகா என்ற நபரை காதலித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அவ்வபோது தனது ஆண் நண்பருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் ஆகியவற்றை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை, திருமணம் பற்றிய உங்களின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை, ஆனாலும் சாந்தனுவுடன் இருக்கும் நட்பு தொடரும் என்று கூறியிருந்தார். இருவரும் லிவ்விங் முறையில் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். தற்போது ஸ்ருதி வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றால் மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை நான் எதிர்கொள்கிறேன் – பெண்களுக்கு தெரியும் இது சமநிலையற்ற, வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற சவால்களுடன் ஒரு கடினமான போராட்டம் என்று. ஆனால் அதை ஒரு சண்டையாக பார்க்காமல் இதை இயற்கையான நிகழ்வு என்று ஏற்றுக் கொண்டுள்ளேன். சரியாகச் சாப்பிட்டு நன்றாக உறங்கி, என் வேலையை அனுபவிப்பதன் மூலம் நான் நன்றாக இருக்கிறேன் அதற்காக நன்றி சொல்கிறேன் – என் உடல் இப்போது சரியாக இல்லை, ஆனால் என் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது. எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், அந்த மகிழ்ச்சியான ஹார்மோன்கள் ஓடட்டும் !!! நான் கொஞ்சம் பிரசங்கித்தனம் என்று தெரியும் ஆனால் இந்த சவால்களை ஏற்று என்னை வரையறுத்து விடாமல் இருக்க இது ஒரு பயணம்.. அதனால்…! இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பகிர்ந்துள்ளார்.