உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக வீரசிம்ம ரெட்டி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதில் பாலகிருஷ்ணா உடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன் மரண மாஸாக நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் ஸ்ருதிஹாசனின் நடனத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். தமிழ் திரையுலகின் மூத்த கலைஞராக இருக்கும் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு என்கிற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். பின்னர் இவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அஜித்குமாருக்கு ஜோடியாக வேதாளம் என்கிற படத்திலும், விஜய்க்கு ஜோடியாக புலி படத்திலும் நடித்து அசத்தினார். திரைக்கு வந்து குறுகிய நாட்களிலேயே விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைவருடனும் நடிக்க தொடங்கினார் ஸ்ருதிஹாசன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறு வயதிலேயே தேவர் மகன் என்கிற படத்தில் தனது தந்தையுடன் நடித்து பிரபலமான இவர், மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு குறைந்த அளவிலான படங்களே கிடைத்தது. இருந்தபோதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது 3 தான். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். புலி படத்திற்கு பின்னர் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது இவர் தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். பிரபல மலையாள படமான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர் மலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சில தெலுங்கு படங்களிலும் கைவசம் வைத்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக வீரசிம்மரெட்டி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தில் முதல் சிங்கள் பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலில் பாலகிருஷ்ணா உடன் இணைந்து ஸ்ருதிஹாசன் தாறுமாறாக குத்தாட்டம் போட்டு இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!
YouTube Video Embed Code Credits: Sony Music South.