நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முகப்ரியாவின் கணவர் திடீர் மரணம்.! இதுதான் காரணம்.!

வெளியிட்டது

சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் தற்போது மரணம் அடைந்திருக்கும் செய்தி சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன நிலையில் தற்போது ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் மரணம் அடைந்திருக்கிறார். தற்போது அந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அரவிந்த் சேகரின் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. அதன் பின்னர் இவர் வாணி ராணி பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான கொடி என்கிற படத்திலும் நடித்திருக்கிறார் ஸ்ருதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முகப்ரியாவின் கணவர் திடீர் மரணம்.! இதுதான் காரணம்.! 1

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வக்கீலும், பொறியாளரும், உடற்பயிற்சி ட்ரையினராக இருந்த அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கோயமுத்தூரில் வைத்து இவர்களது திருமணம் நடைபெற்றது. ஜனவரி 2022 ஆம் ஆண்டு தனது கணவரை அறிமுகப்படுத்தி ஸ்ருதி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் அரவிந்த் சேகரை திருமணம் செய்ய இருப்பதாகவும் அறிவித்திருந்தார். மே 2022ல் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருந்தார் ஸ்ருதி. கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் வெளியிடுவது இருவரும் இணைந்து ரீல்ஸ் செய்து வீடியோக்களை வெளியிடுவது என்று சமூக வலைத்தளங்களில் இருவரும் மிக ஆக்டிவாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஸ்ருதியின் மரணம் அடைந்துள்ள செய்தி கிடைத்திருக்கிறது. அரவிந்துக்கு தற்போது கார்டியாக் அரஸ்ட் என சொல்லப்படும் இருதய முடக்கம் ஏற்பட்டு அவர் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தியை கேட்ட பலரும் மனம் உடைந்து போய் இருக்கின்றனர். திருமணமாகி ஒரு வருடங்களே ஆகியிருக்கும் நிலையில் அரவிந்த் சேகர் மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..! பலரும் ஸ்ருதிக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர். அரவிந்த் சேகருக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்