திடீரென மாரடைப்பால் காலமான தனது கணவர் குறித்து தற்போது ஸ்ருதி ஷண்முகப்பிரியா முதல்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருக்கிறார். அதில் அவர் தன் கணவர் இறப்புக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். நேற்று முதல் தமிழ் திரையுலகினரை உலுக்கி வரும் ஒரு செய்தி தான் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் காலமான செய்தி. 30 வயதேயான அரவிந்த் சேகர் மாரடைப்பால் காலமான செய்தி இணையத்தையே உலுக்கியது. அது மட்டுமில்லாமல் ஸ்ருதியுடன் திருமணம் ஆகி ஒரு வருடங்களே நிறைவடைந்த நிலையில், அவரின் இந்த மரணம் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அரவிந்த் சேகர் இறந்ததற்கு காரணம் என்று சொல்லி பல youtube சேனல்கள் பொய்யான வதந்தியை பரப்பி வந்த நிலையில் தற்போது ஸ்ருதி முதல் முறையாக விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிவில் இன்ஜினியரிங்கும், ஜிம் ட்ரைனருமாக இருந்த அரவிந்த் சேகருக்கும் ஸ்ருதிக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஊரே கண் படும் அளவிற்கு தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்காமல் விரைவிலேயே அரவிந்த் சேகர் மரணம் அடைந்து விட்டார். அவரது மரணத்திற்கான காரணமாக இருதயம் முடக்கம் என்று சொல்லப்படும் கார்டியாக் அரெஸ்ட் என கூறப்பட்டது. ஆனால் சில youtube சேனல்கள் மட்டும் மீடியாக்கள் அவர் இறப்பிற்கு காரணம் அதிக அளவில் ஸ்டீராய்ட் எடுத்துக் கொண்ட காரணத்தினாலும் ஜிம்மில் அதீத உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த காரணத்தினால் தான் இறந்தார் என்று தவறான தகவல்களை பரப்பத் தொடங்கினர். தற்போது அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு ஸ்ருதி விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
அரவிந்து இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு பலரும் நேரில் வந்தும் மொபைலிலும் எங்களுக்கு ஆதரவு சொன்னீர்கள். அனைத்திற்கும் நன்றி. அரவிந்த் இறப்பு பற்றி சமூக வலைத்தளங்களிலும் youtube களிலும் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவர் மாரடைப்பு ஏற்பட்டு தான் இறந்தார். ஆனால் அவர் youtube-ல் சொல்வது போல உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோதோ, அல்லது ஸ்டீராய் எடுத்துக் கொண்ட காரணத்தினாலோ அவர் இறக்கவில்லை. அவர் இறப்பிலிருந்து நாங்கள் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து கொண்டிருக்கிறோம். மேலும் எங்களை காயப்படுத்த வேண்டாம் என்று சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O