ரசிகர்கள் காட்டிய அன்பு..சீரியலில் இருந்து விலகும் முடிவை மாற்றிக்கொண்ட சிபு..இனி உங்க அர்ஜூன் சாராக தொடர போறேன்..

வெளியிட்டது

ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்த சிபு, தனது முடிவை மாற்றிக் கொள்வதாக அறிவித்துள்ளார். சன் டிவியில் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர்தான் “ரோஜா”. இதில் அர்ஜூன் என்ற கதாபாத்திரத்தில் கன்னட நடிகரான சிபு சூரியனும், ரோஜா என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் வடிவுக்கரசி, காயத்ரி, ராஜேஷ், டாக்டர் ஷர்மிளா போன்ற முண்ணனி நடிகர்களும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த நாடகம் 1100 எபிசோடுகளை தாண்டிவிட்டது. இந்த நாடகம் இவ்வளவு சுவாரஸ்யமாக செல்வதற்கு முக்கிய காரணம், சிபு மற்றும் பிரியங்கா செய்யும் ரொமான்ஸ் தான். இவர்கள் இருவரின் காதல் காட்சிகளை்பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

ரசிகர்கள் காட்டிய அன்பு..சீரியலில் இருந்து விலகும் முடிவை மாற்றிக்கொண்ட சிபு..இனி உங்க அர்ஜூன் சாராக தொடர போறேன்.. 1

ரோஜா அர்ஜூன் சார், அர்ஜூன் சார் என கூப்பிடுவதும், அர்ஜூன் கோர்ட் சீன்களில் கலக்குவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தன. இவர்கள் இருவரும் தோன்றாத எபிசோடுகள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்து இருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை. சோஷியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் சிபு அடிக்கடி போட்டோக்கள் மற்றும், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்வது உண்டு. இதனால் அவரை பின் தொடர்பவர்களும் அதிகம். அப்படி இருக்கையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ரோஜா சீரியலில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார் சிபு.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்த அவர், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து புதிய பயணத்தை தொடங்குவதால் ரோஜா சீரியலை விட்டு விலகுகிறேன், உங்களுடைய அன்பும் ஆதரவும் இல்லாவிட்டால் இன்று என்னை யாருக்கும் தெரியாது. நீண்ட யோசனை செய்து, தயாரிப்பு நிறுவனத்துடன் பேசி இந்த முடிவை எடுத்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றி, புது சீரியலில் தொடர உள்ளேன், இதே போல் உங்கள் அன்பும், ஆதரவும், ஆசீர்வாதங்களும் வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். இதனால் ரோஜா சீரியல் பார்க்கும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். நீங்கள் இல்லையென்றால் இனிமேல் இந்த சீரியலை பார்க்க மாட்டோம் என்று பலர் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து இன்று ஒரு பதவிட்டுள்ளார் சிபு. அதில் நான் ரோஜா சீரியலில் இருந்து விலகும் முடிவை அறிவித்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மெசேஜ், போன்கால்கள், போஸ்டுகள் என உங்கள் அன்பால் நான் மூச்சடைத்து போய் இருக்கிறேன். நீங்கள் காட்டும் இந்த பேரன்பிற்கு நன்றி. உங்கள் அனைவரின் கோரிக்கையை ஏற்று சீரியலில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்கிறேன். உங்கள் அபிமான அர்ஜீன் சாராக தொடர்வது பற்றி யோசிக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Watch the below Video…

Youtube Video Code Embed Credits: Trend Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்