Categories: சினிமா

காதலி அதிதி ராவுடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு வேற லெவல் குத்தாட்டம் போட்ட சித்தார்த்..!

வெளியிட்டது

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் என்று கூறப்படும் நிலையில், தற்போது அவர்கள் இருவரும் இணைந்து ட்ரெண்டிங் பாடலான மால டம் டம் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கின்றனர். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவது உண்மையாகி இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்களில் கூறி வருகின்றனர். பாய்ஸ் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். சாக்லேட் பாயாக ஒரு காலத்தில் வலம் வந்த அவர் தற்போது சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல் உதவி இயக்குனர், பாடகர், பின்னணி பேசுபவர் என்று பன்முக திறமையாளராக இருக்கிறார் சித்தார்த். ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் சித்தார்த். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காதலி அதிதி ராவுடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு வேற லெவல் குத்தாட்டம் போட்ட சித்தார்த்..! 1
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கடைசியாக தமிழில் அருவம் என்கிற படத்தில் நடித்தார். பின்னர் அவருக்கு எந்த ஒரு படமும் சரியாக அமையவில்லை. சில வருடங்களாக அவரின் படங்கள் மக்களிடையே சரியான வரவேற்பை பெறுவதில்லை. இதனால் அவர் தெலுங்கு படங்களில் மட்டுமே தற்போது அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட தனக்கு படங்கள் சரியாக அமையாவிட்டால் தான் சினிமா துறையில் இருந்து விலகவும் தயாராக இருப்பதாகவும் அவர் பேசினார். தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சில நாட்களாக நடிகை அதிதி ராவ் உடன் அவர் டேட்டிங் செய்து வருவதாகவும் இருவரும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. காற்று வெளியிடை படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு இருவரும் ஒரே காரில் வந்திருந்தனர். மேலும் அதிதியின் பிறந்தநாள் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது என் இதயத்தின் அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று சொல்லி சித்தார்த் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனால் இருவரும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டதாக நெட்டிசன்கள் தகவல்களை பரப்பி வந்த நிலையில் தற்போது மீண்டும் அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் மால டம் டம் பாடலுக்கு இருவரும் இணைந்து குத்தாட்டம் போட்டு அந்த வீடியோவை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். இதனால் இருவரும் காதல் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்