தனது முதல் திருமண நாளுக்கு மனைவிக்கு கார் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்து இருக்கிறார் சித்து. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து இன்று ரியல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்கள் இருவரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்கிற சீரியல் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்கள். திரையில் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக, நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலும் youtube பக்கத்திலும் தங்களது சேனலை தொடங்கி அதில் Vlogs வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஸ்ரேயா. ஏற்கனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இருவரும் சமீபத்தில் தங்களது தல தீபாவளியை கொண்டாடி இருந்தனர். இன்ஸ்டாகிராமில் ஆறு லட்சம் பேர் ஸ்ரேயாவை பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று இருவருக்கும் முதல் திருமண நாள். இதற்காக அதிகாலையில் எழுந்து வடபழனியில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்ற அவர்கள் அங்கு ஏழைகளுக்கு உணவு வழங்கினார்கள். பின்னர் தனது மனைவிக்கு உயர் ரக கார் ஒன்றை பரிசாக வழங்கினார் சித்து. பின்னர் கடற்கரை ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்து சென்று சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த வீடியோவை தனது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் சித்து. அந்த அழகிய வீடியோவை நீங்களும் காண.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Sidhu & Shreya