Categories: BiggBoss Ultimate

பிக்பாஸை தொகுத்து வழங்க போவது இவர்தான்.. நாளை வெளியாக உள்ளது மாஸ் அறிவிப்பு..| BB Ultimate

வெளியிட்டது

பிக்பாஸ்ஸில் விலகுவதாக அறிவித்து விட்டார் கமல்ஹாசன். இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் கமல். விக்ரம் படத்தின் வேலைகள் பாதியில் நிற்பதாகவும் என்னை நம்பி இருக்கும் பல சினிமா துறை நண்பர்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும், இது தற்காலிக இடைவெளிதான் மீண்டும் உங்களை சீசன் 6ல் சந்திக்கிறேன் என்றும் கையொப்பம் இட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தன்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு அவர் மன்னிப்பும் கோரி இருந்தார்.

பிக்பாஸை தொகுத்து வழங்க போவது இவர்தான்.. நாளை வெளியாக உள்ளது மாஸ் அறிவிப்பு..| BB Ultimate 1

கடந்த ஐந்து சீசன்களை சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார் கமலஹாசன். இவருடைய வார இறுதி எபிசோடுகளை மட்டும் பார்க்கவே நிறைய ரசிகர்கள் உண்டு. அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை கமலஹாசன் ஹவுஸ்மேட்ஸிடம் உரையாற்றுவார். சில சமயங்களில் கோபமாகவும், சில சமயங்களில் சுவாரஸ்யமாகவும் நிகழ்ச்சியை நகர்த்தி வந்தார் கமல் என்றால் அது மிகையில்லை. அவருடைய விலகல் பிக்பாஸ் ரசிகர்களிடையே மிகுந்த வருத்ததையும் ஏற்படுத்தியுள்ளது. Twitter Source from: Karthik Ravivarma

இந்த நிலையில் தற்போது புது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கமல் நிகழ்ச்சியை விட்டு விலகிய நிலையில் மீதி நிகழ்ச்சியை நடிகர் சிம்பு நடத்துவார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான மாநாடு படம் வெற்றியினால் சிம்புவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உருவாகியுள்ளது. எனவே சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்க்கான அறிவுப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. youtube video code embed credits: cineulagam

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்