Categories: சினிமா

கொரோனா குமார் படத்தில் இருந்து திடீரென விலகிய சிம்பு? படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதா?

வெளியிட்டது

பிரபல இயக்குனர் டி.ராஜேந்தர் அவர்களின் மூத்த மகன்தான் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக டி.ராஜேந்தர் அவர்களுடன் நடித்து வந்தார். வளர்ந்த பிறகு கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இவரை சுற்றி பல பிரச்சினைகள் வந்த வண்ணமே உள்ளது. சமீபத்தில் கூட சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சிம்புவை காதலிப்பதாக கூறி பரபரப்மை ஏற்படுத்தினார். மேலும் இடைப்பட்ட காலத்தில் இவர் படங்களில் நடிப்பதும் பெருமளவில் குறைத்து இருந்தார். அப்படியே படங்கள் நடித்தாலும் பெரும் சர்ச்சைகளுக்குப் பிறகு தான் படம் வெளியாகி வந்தது.

கொரோனா குமார் படத்தில் இருந்து திடீரென விலகிய சிம்பு? படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதா? 1

தற்போது மாநாடு படம் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்து இருக்கிறார் சிம்பு. இந்த படம் சிம்புவுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் மாநாடு படம் தற்போது வரை 117 கோடி வசூல் செய்துள்ளது என்று கூறினார். தற்போது சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இது சிம்புவின் 47வது படமாக உருவாகி வருகிறது. இதற்கு பின்னர் பத்து தல, கொரோனா குமார் என்ற படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார் சிம்பு. தற்போது டி.ராஜேந்தர் அவர்களின் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதால் ஒரு படத்தை ட்ராப் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா குமார் படத்தை பிக்பாஸ் பிரபலம் வருணின் மாமா ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. சிம்பு விலகும் சூழலில் அவர் வேறு ஒரு படத்தில் நடித்து தர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் லிங்குசாமியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கொரோனா குமார் படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுலால் இயக்கப்பட இருந்தது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. பல தோல்விகளுக்குப் பின்னர் தொடர்ந்து படம் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்த சிம்பு தற்போது மீண்டும் விலகியிருப்பது சிம்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்