இனிமே நான்தான் பிக்பாஸை வழங்க போறேன்.. மாஸ் காட்டிய சிம்பு | BiggBoss Ultimate Simbu

வெளியிட்டது

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சிம்பு பிக்பாஸ்ஸை தொகுத்து வழங்க உள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன் Official ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் எதிர்பாக்கல தானே? நானும் எதிர்பாக்கல என்று கெத்தாக வருகிறார். அந்த Official ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the promo below…

இனிமே நான்தான் பிக்பாஸை வழங்க போறேன்.. மாஸ் காட்டிய சிம்பு | BiggBoss Ultimate Simbu 1

பிக்பாஸ்ஸில் விலகுவதாக அறிவித்து விட்டார் கமல்ஹாசன். இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் கமல். விக்ரம் படத்தின் வேலைகள் பாதியில் நிற்பதாகவும் என்னை நம்பி இருக்கும் பல சினிமா துறை நண்பர்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும், இது தற்காலிக இடைவெளிதான் மீண்டும் உங்களை சீசன் 6ல் சந்திக்கிறேன் என்றும் கையொப்பம் இட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தன்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு அவர் மன்னிப்பும் கோரி இருந்தார்.

கடந்த ஐந்து சீசன்களை சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார் கமலஹாசன். இவருடைய வார இறுதி எபிசோடுகளை மட்டும் பார்க்கவே நிறைய ரசிகர்கள் உண்டு. அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை கமலஹாசன் ஹவுஸ்மேட்ஸிடம் உரையாற்றுவார். சில சமயங்களில் கோபமாகவும், சில சமயங்களில் சுவாரஸ்யமாகவும் நிகழ்ச்சியை நகர்த்தி வந்தார் கமல் என்றால் அது மிகையில்லை. அவருடைய விலகல் பிக்பாஸ் ரசிகர்களிடையே மிகுந்த வருத்ததையும் ஏற்படுத்தியுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்