பாடகி சுசிலா தமிழில் மிக பெரிய வெற்றி அடைந்த பாடல்கள் பலவற்றை பாடியுள்ளவர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி முதல் இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் இவர் தங்களுடைய படங்களில் தொடர்ந்து பாடவைத்து உள்ளனர். கிட்டத்தட்ட இந்திய மொழிகளிலும் சேர்த்து 50000 பாடல்களை படி உள்ளார். இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஒரியா,பெங்காலி, சான்ஸ்க்ரிட்,துலு,ஹிந்தி போன்ற பல மொழில்களில் படி அசத்தியுள்ளார். வீடியோ லிங்க் கீழே.
கடந்த 1969ஆம் ஆண்டில் உயர்ந்த மனிதன் படத்தில் பால் போலாவே பாடலிற்கு முதல் முறை தேசிய விருது பெற்றார். தேசிய விருதை வென்ற நாட்டிலேயே முதல் பிரபல பாடகி என்ற பெருமையை சுசீலா பெற்றார். அவர் பாடிய எந்த மொழியிலும் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும் எனவும் அழகிய குரல் வளம் உள்ள பாடகர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தென்னிந்திய சினிமாவுடன் தொடர்புடைய இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். அவர் இந்தியாவின் சிறந்த மற்றும் நன்கு அறியப்பட்ட பின்னணி பாடகர்களில் ஒருவர். பல்வேறு இந்திய மொழிகளில் பல பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
தாய் மொழி தெலுங்கு என்றாலும், இவர் தற்போது எனக்கு முக்கியமான மொழி தமிழ் தான். நான் பல மொழிகளில் பாடி உள்ளேன்,இருப்பினும் எனக்கு முதலில் அங்கிகாரமும், முகவரியும், இப்பொது வரை என்னை மறக்காத எண்ணில் அடங்காத ரசிகர்களையும் கொடுத்த இந்த தமிழ்நாடும், தமிழ் மொழியும் தான் எனக்கு முக்கியம். இதனை நான் வாயிலிருந்து கூறவில்லை. மனதில் இருந்து ககூறுகிறேன். எப்போதும் என் நெஞ்சில் உங்களுக்கு இந்த மொழிக்கும் மிக பெரிய இடம் உள்ளது என நெகிச்சிகரமாக பேசியுள்ளார்.
இவர் அண்மையில் ரசிகர்களை சந்தித்த பொது இதனை கூறியுள்ளார். எனக்கு பத்ம பூஷன் விருதிற்கு சிபாரிசு செய்த கலைஞர் கருணாநிதி அவர்களும், என்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த இசைமைப்பளர்கள் பலருக்கு இந்த நேரத்தில் நான் மனமார்ந்த நன்றிகளையும் என்னுடைய வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என கூறி தன்னுடைய சிறந்த பாடல்கள் சிலவற்றை படியும் ரசிகர்களை உற்சாகத்தில் அளித்துள்ளார்.
Video Courtesy – Sun news