நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்.! காதலை அறிவித்த சிப்பிக்குள் முத்து சீரியல் நட்சத்திரங்கள்

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து வந்த இருவர் தாங்கள் காதலிப்பதாக தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். பொதுவாகவே நடிகர்களுக்கு உடன் நடிக்கும் சக நடிகர்களுடன் காதல் ஏற்படுவது வழக்கம் தான். அதுபோல பல முன் உதாரணங்களை நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். வெள்ளித்திரையில் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, நயன்தாரா-விக்னேஷ் சிவன் போன்றவர்கள் படத்தில் ஒன்றாக நடித்துக் கொண்டிருந்தபோதுதான் அவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். சின்னத்திரையிலும் இதுபோல் சித்து – ஸ்ரேயா, ஆலியா மானசா-சஞ்சீவ், செந்தில்-ஸ்ரீஜா போன்ற நட்சத்திர ஜோடிகள் வலம் வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த இருவர் தங்கள் காதலை உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்.! காதலை அறிவித்த சிப்பிக்குள் முத்து சீரியல் நட்சத்திரங்கள் 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் அபினவ் என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணுகாந்த் என்பவரும், பொன்னி என்கிற கதாபாத்திரத்தில் சம்யுதா என்பவரும் நடித்து வந்தனர். விஷ்ணுகாந்த் ஏற்கனவே சில சீரியல்களின் நடித்து வந்த நிலையில் சிப்பிக்குள் முத்து சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சம்யுதா ஏற்கனவே பல youtube தொலைக்காட்சிகளில் நடித்திருக்கிறார். மேலும் நிறை மாத நிலவே என்னும் வெப் தொடரிலும் அவர் நடித்திருக்கிறார். இந்த தொடரில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தது. தொடர்ந்து அவருக்கு விஜய் டிவியில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த நாடகம் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த நிலையில் இன்று சம்யுதாவின் பிறந்தநாளில் விஷ்ணுகாந்தை தான் காதலிப்பதாக புகைப்படத்துடன் பகிர்ந்து இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் நான் உன்னைக் கண்டேன். என் வாழ்வின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியாக மாற்றிய மனிதர் நீங்கள். நான் உங்களுடன் இருக்கும்போது என்னை நன்றாக உணர்கிறேன். என் வாழ்க்கையில் வந்ததற்கு மிக்க நன்றி. இந்த பிறந்தநாளில் இருந்து, உன்னுடன் என் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாக இருக்கும். உங்கள் அனைவரின் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் பெற விரும்புகிறோம். இதுவரை நீங்கள் எனக்குக் கொடுத்த அன்புதான் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆதரவாகும், இப்போது நாங்கள் இருவரும் உங்கள் அனைவரிடமிருந்தும் அதை இரட்டிப்பாகப் பெற விரும்புகிறோம். உங்கள் அன்பான இதயத்தால் எங்கள் இருவரையும் ஆசீர்வதியுங்கள். இருவருக்கும் அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்