விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், முத்து மற்றும் மீனா இருவரும் ரோகிணி அம்மாவிடம் வந்து கிரிஷை நாங்க தத்தெடுத்துக்கொள்வதாக கூறுகின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்க கூறிய தனது மகள் ரோகிணியை கிழித்தெடுக்கிறார் அம்மா. மேலும் கிரிஷை இத்தனை நாள் பார்த்தது தாங்கள் தான் எனவும், உனக்கு உரிமை இல்லை என ரோகிணியிடம் அம்மா கூறுகிறார்.
மேலும் நான் க்ரிஷ் உன் பையன்னு வெளியே சொன்னா எல்லாருக்கும் தெரிஞ்சிடும் என மிரட்டுகிறார். இதனை கேட்டு ரோகிணி அதிர்ச்சியில் செய்வதறியாது முழித்து கொண்டு இருக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரோகிணி வசமாக மாட்டிவிட்டதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION