ரோகிணி அம்மாவாகியதாக தவறாக புரிந்துகொண்ட மீனா..! கடுப்பாகி எச்சரித்த ரோகிணி..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடரின் சுவாரசியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவில் ரோகிணி மருத்துவமனைக்கு வந்து இருப்பதாக தோழியின் மூலம் மீனா தெரிந்துகொள்கிறார். மேலும் ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக தவறாக புரிந்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரோகிணி அம்மாவாகியதாக தவறாக புரிந்துகொண்ட மீனா..! கடுப்பாகி எச்சரித்த ரோகிணி..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 1

இதனால் வீட்டிற்கு வரும் மீனா அனைவர்க்கும் இனிப்பு செய்து வழங்கி, ரோகிணி அம்மாவாகியதாக கூறுகிறார். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாகும் நிலையில் , இதனை கேட்டு அதிர்ச்சியாகிய ரோகிணி அது உண்மையில்லை என கூறுகிறார், மேலும் மீனாவை பார்த்து , உங்களுக்கு எல்லை இருப்பதாகவும் அதனை தாண்ட கூடாது எனவும் ரோகிணி கடுமையாக எச்சரிக்கிறார்.

இதனால் மீனா சோகமடைகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் மீனாவின் செயலை திட்டி வருகின்றனர். எதையுமே முழுசாக தெரியாமல் நடந்துகொள்வதாக ரசிகர்கள் மீனாவை விமர்சித்து வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்