விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்து வைத்து உள்ளது இந்த தொடர். நாளுக்கு நாள் தொடரின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருகி வருகிறது. எதிர்பார்ப்பு மட்டுமில்லாமல் ஆர்வமும் அதிகரித்து உள்ளது என்றே சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. மீனாவின் நகைகளை கவரிங் ஆக மாற்றிய மனோஜிற்கு துணை போனதால் விஜயா மீது அண்ணாமலை கடும் கோபத்தில் உள்ளார். மேலும் விஜயா உடன் இனி பேசப்போவது இல்லை என முடிவெடுத்த அண்ணாமலை அவரிடம் பேசாமல் விலகி செல்கிறார். இதனால் கடுப்பாகிய விஜயா தனது கோபத்தை மீனா மேல் காட்டுகிறார்.
இந்த ப்ரோமோ ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. விஜயாவின் செயலை ரசிகர்கள் அனைவரும் கடுமையாக திட்டி வருகின்றனர். அண்ணாமலை மேல் கோபம் இருந்தால் அவர் மீது காட்ட வேண்டியதுதானே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION