விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் தொடர்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உருவாகி உள்ளது. தொடரில் நடிப்பவர்கள் தங்களது அசாதாரண நடிப்பினை காண்பித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளனர். இயக்குனரும் திரைக்கதையை சுவாரஸ்யமாக எழுதி ரசிகர்களின் கூட்டத்தினை அதிகரித்து கொண்டே செல்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவில், விஜயா முத்துவிடம் குழந்தை எப்போது பெற போகிறீர்கள் என கேட்கவே , அதற்கு முத்து வீடு கட்டிய பிறகு தான் அதெல்லாம் என கூறுகிறார். அதற்கு விஜயா அப்போ குழந்தை 50 வயசில் தான் பெத்துக்கிடுவே என நக்கல் அடிக்கிறார். இதனால் முத்து செம்ம கடுப்பாகிறார். மேலும் விஜயாவை பார்த்து உங்களுக்கு என்ன என்று கேட்கிறார்.
கைநீட்டி பேசியதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார். அங்கிருந்து தம்பி முத்துவை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் விஜயாவின் மீது இருக்கும் கோபத்தை அதிகரித்து இருக்கிறது. முத்து வீடு கட்டத்தான் போறாரு நீங்க பார்க்கத்தான் போறீங்க என விஜயாவிற்கு முத்து ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION