விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சத்யாவை மாட்டிவிட சிட்டி, ரோகிணியை வைத்துக்கொண்டு, முத்து செல்போனில் வீடியோ எடுக்க திட்டமிட்டு வருகிறார்.இந்நிலையில் மனோஜ் ரோகிணி திருமண பார்ட்டியில் குடித்த முத்துவிடம் இருந்து செல்போனை திருடுகிறார் ரோகிணி. தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில், திடீரென வீட்டில் செல்போனை தேடும் முத்து அதை காணவில்லை என்ற உடன் பதறுகிறார்.
வீடு முழுவதும் செல்போனை தேடுகிறார் கிடைக்காததால் என்ன செய்வது என்று புரியாமல் உள்ளார். இதனை ரோகிணி பார்த்து வருகிறார். அதில் சத்யாவின் வீடியோ இருப்பதால் அது மாட்டியது என்றால் சத்யா வாழ்க்கை வீணாகிவிடும் என முத்து செய்வதறியாமல் உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION