கோலாகலமாக நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் முத்து திருமண நிச்சயம்..! பொன்னி சீரியல் நாயகியை கரம்பிடித்தார் வெற்றி வசந்த்..!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தொடக்கத்தில் சீரியல் கதை தடுமாறி இருந்தாலும் தற்போது வெற்றி சீரியலாக மாற்றியுள்ளார் இயக்குனர். இந்த சீரியல் வெற்றிக்கு முக்கிய காரணமே இதில் நடித்து வரும் நடிகர்கள் தங்களது சிறந்த நடிப்பினை கொடுப்பதே. தற்போது இந்த சீரியல் மிகப்பெரிய ஹிட் சீரியலாக உருவெடுத்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

கோலாகலமாக நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் முத்து திருமண நிச்சயம்..! பொன்னி சீரியல் நாயகியை கரம்பிடித்தார் வெற்றி வசந்த்..! 1

இந்த சீரியலில் கதாநாயகனாக வருபவர் தான் வெற்றி வசந்த். இந்த சீரியல் மூலம் தான் இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகியுள்ளார். இந்த சீரியலில் எதார்த்தமாக நடித்து தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் இவர் தனது காதலியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். ரசிகர்கள் அவர் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவியை காதலிப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும் விரைவில் திருமண நிச்சயம் நடைபெறுவதையும் அறிவித்து இருந்தார். அதன்படி தற்போது இவர்களது திருமணம் நிச்சயம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்