சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ அதிரடியாக வெளியாகி இருக்கிறது. அதில் முத்து எதிர்பாராத விதமாக மீனாவை அடிப்பதற்காக கையை ஓங்கிக் கொண்டு ஓடுகிறார். இதனால் முத்துவுக்கும் மீனாவுக்கும் பயங்கர சண்டை எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பரபரப்பான கட்டங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது முத்து மற்றும் மீனா இருவருக்கும் இடையே சண்டை எழுந்து இருக்கிறது. முத்துவும் மீனாவை கடுமையாக பேசியதுடன் அவரை அடிப்பதற்காக கையை ஓங்கி கொண்டு செல்கிறார். அந்த சமயம் பார்த்து மீனாவின் தாயாரும் உள்ளே வருகிறார். இதனால் முத்து – மீனா இடையே பிரிவு ஏற்படுமோ என்று சீரியல் ரசிகர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒளிபரப்பாகத தொடங்கிய சில நாட்களிலேயே மக்கள் மனங்களில் இடம் பிடித்த ஒரு தொடர் தான் சிறகடிக்க ஆசை. தற்போது இந்த சீரியலில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரின் திருமணம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அடுத்த அடுத்த பிரச்சனைகள் எழுந்திருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்து கோபத்துடன் வீட்டிற்கு வருகிறார். அவர் மீனாவிடம் சண்டை போடுகிறார். என்னுடைய காரை மாட்டி விட்டது அந்த கந்துவட்டி காரன் தான் என தெரிந்தும் நீ எதுவும் என்னிடம் சொல்லாமல் இருந்திருக்கிறாயே என்று சொல்லி மீனா விடம் சண்டை போடுகிறார் .அப்போது முத்துவின் அப்பா எதற்காக இப்பொழுது மீனாவிடம் கத்திக் கொண்டிருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு முத்து என்னுடைய கார் போலீஸில் மாட்டியதற்கு காரணமே அந்த கந்து வட்டிக்காரன் தான் என சொல்லுகிறார். அதற்கு ஏன. மீனாவிடம் ஏன் கத்திக் கொண்டிருக்கிறாய் என்று அண்ணாமலை கேட்கிறார்.
அப்போது முத்து இந்த விஷயம் ஏற்கனவே மீனாவிற்கு தெரிந்திருந்தும் என்னிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார் என்று சொல்லி கோபப்படுகிறார். மேலும் அந்த பணத்திற்கு நான் எங்கே செல்வது உன் அப்பன் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பியா என்று முத்து மீனாவிடம் கேட்க, என் குடும்பத்தை பற்றி பேசினால் அவ்வளவு தான் என்று கோபத்தில் கத்துகிறார் மீனா. அப்போது அவரை அடிக்க கையை ஓங்கி கொண்டு அடிக்கப் போகிறார் முத்து. அப்போது மீனாவின் தாயார் வீட்டிற்குள் வருகிறார். இதனால் அடுத்து முத்து மீனா இருவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிகிறது. தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television