தாலி உட்பட அனைத்தையும் கழட்டி விஜயா முகத்தில் வீசிய மீனா.! அதிரடியான ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து கட்டிய தாலிக்கொடியை அவிழ்த்து மீனா வைத்துவிட்டு மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார். அதற்கு முக்கிய காரணமாக விஜயா செய்த செயல் தான் காரணமாக பார்க்கப்படுகிறது. ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலையின் மூன்றாவது மருமகளாக இருக்கும் ஸ்ருதியின் தாயார் இன்று வீட்டிற்கு வருகிறார். அவர் 50 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு வந்த கொடுத்து ஸ்ருதிக்கு சீதனமாக இதை வைத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால் இதை வாங்கினால் வரதட்சணை வாங்கியது போல் ஆகிவிடும் என்று சொல்லி அண்ணாமலை நகைகளை வாங்க மறுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாலி உட்பட அனைத்தையும் கழட்டி விஜயா முகத்தில் வீசிய மீனா.! அதிரடியான ப்ரோமோ இதோ.! 1

அப்போது ஸ்ருதியின் தாயார், “உங்கள் மூத்த மருமகள் எவ்வளவு நகைகளை போட்டு வந்தார்? இளைய மருமகள் எவ்வளவு நகை போட்டு வந்தார்? என்றெல்லாம் கேள்வி கேட்கத் தொடங்குகிறார். அப்போது விஜயா, “மீனா எதுவும் போடாமல் தான் வந்தார். அவருக்கு நகைகள் அனைத்தையும் நாங்கள் போட்டு திருமணம் செய்து கொண்டு வந்தோம்” என்று கூறுகிறார். இதை கேட்கும் மீனா, சோகத்தில் கண்ணீர் வடிக்கிறார். மேலும் எதற்காக இப்படி பேசினீர்கள் என்று சொல்லி விஜயாவிடம் முத்து கேட்க, “இவள் அப்பன் இறந்தபோது என்னை இவளுக்காக நகை போட்டுவிட்டு இறந்தானா?” என்று மிகவும் கேவலமாக பேசுகிறார். இதனால் கோபமான மீனா அண்ணாமலை போட்ட நகைகளை எல்லாம் அவிழ்த்து வைத்து விடுகிறார்.


தாலி முதல் கொண்டு நகைகளை அவிழ்த்து கீழே வைக்கும் மீனா, “இனி என் புருஷன் சம்பாதித்தால் மட்டுமே நான் நகைகளை அணிந்து கொள்வேன்” என்று சொல்லி சபதம் எடுக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்