ரோகிணிக்காக வேலையுடன் வந்து நின்ற மனோஜ்..! மனோஜை கட்டிபிடித்துக் கொண்ட ரோகிணி..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்று காண எபிசோட் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் முத்து தன்னை மிகவும் கேவலமாக நடத்துவதை உணர்ந்த மனோஜ், தற்போது வேலையுடன் வந்து நிற்கிறார். மனோஜ்க்கு வேலை இல்லாமல் பார்க்கில் படுத்து உறங்கி வரும் செய்தியை முத்து வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டு உடைக்கிறார். மேலும் மனோஜை மிகவும் அசிங்கப்படுத்துகிறார். இந்த நிலையில் நேற்று துணி அயம் செய்துவிட்டு ரூ.350 பில்லுடன் ஒருவர் வந்து நிற்க, இந்த விஷயம் தெரிந்த முத்து மனோஜை மிகவும் கேவலமாக பேசுகிறார். வேலைக்கு போகாமல் சட்டையை மட்டும் அயர்ன் பண்ணுவதற்கு நான் காசு கொடுக்க வேண்டுமா? என்று சொல்லி மனோஜிடம் சண்டை போடுகிறார்.

ரோகிணிக்காக வேலையுடன் வந்து நின்ற மனோஜ்..! மனோஜை கட்டிபிடித்துக் கொண்ட ரோகிணி..! 1
அப்போது ரோகிணி தான் அந்த பணத்தை கொடுத்து விடுவதாக கூறி பணத்தை எடுத்து வந்து கொடுக்கிறார். அதன் பின்னர் மனோஜிடம் பேசும் ரோகிணி, “நான் ஒவ்வொரு முறையும் அவமானப்பட்டு அந்த இடத்தில் நிற்கிறேன். எனவே நீ இன்றைக்கு உள்ளாக ஒரு வேலையை வாங்கி வர வேண்டும்” எனக் கூறுகிறார். எனவே வேலை தேடி அலையும் மனோஜ், ஹோட்டல் ஒன்றில் “வேலைக்கு ஆட்கள் தேவை” என்கிற பலகையைப் பார்த்து உள்ளே செல்கிறார். அங்கு சர்வர் அல்லது ஆர்டர் எடுக்கும் வேலை தான் இருப்பதாக ஹோட்டல் உரிமையாளர் கூறுகிறார். எனவே ஆர்டர் எடுக்கும் வேலையை வாங்கிவிட்டு, முதல் நாள் சம்பளத்தையும் வாங்கி வீட்டிற்கு வருகிறார் மனோஜ்.


வீட்டிற்கு வரும் மனோஜ், அனைவரையும் அழைத்து தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை கூறி அல்வாவும் கொடுக்கிறார். அப்போது பேசும் முத்து “வேலைக்கு போன முதல் நாளே யார் சம்பளம் கொடுப்பார்கள்? தினக்கூலி தான் முதல் நாளே சம்பளம் கொடுப்பார்கள். இது எங்கேயோ இடிக்குது” என்று சொல்ல, அதற்கு மழுப்பலாக பதிலளிக்கும் மனோஜ், “எங்கள் கம்பெனி ரொம்ப வித்தியாசமானது. முதல் நாளே சம்பளம் கொடுப்பார்கள். அப்போதுதான் பணியார்கள் சரியாக வேலை செய்வார்கள் என எங்கள் மேனேஜர் முதல் நாளே சம்பளம் கொடுப்பார்” என்று கூறுகிறார். அப்போது விஜயா சந்தோஷத்தில், “என் கௌரவத்தை காப்பாற்றிட்ட மனோஜ்” என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.


பின்னர் மனோஜை ரூமுக்கு அழைத்துச் செல்லும் ரோகிணி, என்ன வேலை? என்று கேட்க அதை சொல்ல மறுக்கிறார்.’ நான் திருடல, பொய் சொல்லவில்லை, யாரையும் ஏமாற்றல, நல்ல வேலைக்கு தான் போறேன். நீ சொன்னதற்காக வேலை வாங்கி விட்டேன்” என்று கூறுகிறார். எனவே ரோகிணி சந்தோசத்தில் மனோஜை கட்டி அணைத்துக் கொள்கிறார். நிலைமை இரு புறம் இருக்க மற்றொரு பெண் மீனாவின் பூக்கடைக்கு வருகிறார். அவர் ஏன் மஞ்சள் நூலில் தாலி அணிந்து இருக்கிறாய்? மாமியார் கொடுமை பண்றாங்களா? என்று கேட்கிறார். “அப்படியெல்லாம் இல்லை, என் மாமியார் என்னை அவங்க பொண்ணு மாதிரி பார்த்துக்கிறாங்க. தாலியில் சின்ன விரிசல் ஏற்பட்டது. எனவே அதை சரி செய்ய கடையில் கொடுத்து இருக்கிறேன்” என்று சொல்லி மீனா சமாளிக்கிறார்.


அந்த சமயம் அங்கு வரும் விஜயா, “இன்னும் பூக்கடையில் நின்று என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அங்கு வேலைக்கு செல்லும் அனைவரும் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருக்கின்றனர். முதலில் இந்த பூக்கடையை காலி செய்ய வேண்டும்” என்று மீனாவை மோசமாக திட்டுகிறார். இதை அந்தப் பெண்மணி பார்த்துவிட்டு, இப்போதுதான் உன் மாமியார் உன்னை மகள் போல் பார்த்துக் கொள்கிறார் என்று கூறினாய்? என சொல்ல, அவர்கள் ஏதோ டென்ஷனில் என்னை திட்டி விட்டுப் போகிறார் என்று மீனா சமாளிக்கிறார். இதையெல்லாம் அண்ணாமலை ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைய தினம் முத்து மீனாவுக்காக தாலி வாங்கி வரும் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்