ஸ்ருதியால் வந்த வினை.! நெஞ்சி வலி வந்து அப்படியே கீழே சரிந்த அண்ணாமலை.! ப்ரோமோ உள்ளே.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அண்ணாமலை நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு, நெஞ்சுவலி வந்து அப்படியே சரிந்து விழுகிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக மீனா ஓடிக் கொண்டிருக்கிறார். தனியாக அவரால் அண்ணாமலையை தூக்க முடியாது என்பதால் உதவிக்கு ஆட்டோவை அழைக்கிறார். இதனால் அண்ணாமலையின் நிலை என்ன ஆகும்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதியால் வந்த வினை.! நெஞ்சி வலி வந்து அப்படியே கீழே சரிந்த அண்ணாமலை.! ப்ரோமோ உள்ளே.! 1
அண்ணாமலை ஏற்கனவே இதய நோயாளி ஆவார். அவருக்கு அதிர்ச்சி தரும் தகவல்களோ, அளவுக்கு மீறிய வாசனைகளோ ஒத்துக்கொள்ளாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் கடைசி மருமகளாக இருக்கும் ஸ்ருதி வீட்டில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி அதற்கான ஸ்பிரே ஒன்றை வாங்கி வீடு முழுவதும் அடிக்கிறார். இதன் நெடி தாங்காமல் மீனாவும் ஓடி விடுகிறார். இந்த நிலையில் வீட்டிற்கு வரும் அண்ணாமலைக்கு இந்த வாசனை ஒத்துக் கொள்ளவில்லை. நெடி அதிகமாக இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா அவருக்கு காபி கொண்டு வந்து கொடுக்கிறார்.

காபியை குடிக்கும் அண்ணாமலை கொசுவை ஒழிக்கும் ஸ்பிரேவின் நெடி தாங்காமல் இருமுகிறார். பின்னர் நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே கீழே சரிந்து விடுகிறார். அவரை காப்பாற்ற முடியாமல் மீனா பதறி ஓடிக் கொண்டிருக்கிறார். ஆட்டோவை அழைப்பதற்காக மீனா ஓடுகிறார். அத்துடன் இந்த எபிசோடு நிறைவடைகிறது. அண்ணாமலைக்கு என்ன ஆனது? அவரது கதை ஏதேனும் முடிவுக்கு வருகிறதா? என்கிற குழப்பம் தற்போது எழுந்து இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்