விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது அண்ணாமலை, விஜயா மற்றும் மருமகள்கள், மகன்கள் அனைவரும் இணைந்து பாட்டியின் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்பதை தற்போது விஜய் டிவி ப்ரோமோவாக வெளியிட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக அண்ணாமலை குடும்பம் கிராமத்தில் இருக்கும் பாட்டியின் வீட்டிற்கு செல்கின்றனர். அப்போது அங்கு விஜயா மீனாவை சமைக்குமாறு சொல்கிறார். இதைக் கேட்ட அண்ணாமலையின் தாயார், “நீ தான் எனக்கு மருமகள். எனவே இந்த வீட்டில் நீ தான் சமைக்க வேண்டும்” என்று கூறுகிறார். அப்போது விஜயா அனைவருக்கும் சமைத்து பரிமாறுகிறார்.
அந்த சமயம் ஸ்ருதி தனது கையை வெட்டி கொண்டதாக கூறுகிறார். எனவே ஸ்ருதிக்கு விஜயா சாப்பாடு ஊட்டுகிறார். இதை பார்த்த பாட்டி, “நீ ஸ்ருதிக்கு மட்டும் மாமியார் இல்லை மற்றவர்களுக்கு மாமியார். எனவே மூன்று மருமகளுக்கும் ஊட்டி விடு” என்று சொல்ல, விஜயா வேண்டா வெறுப்பாக மீனாவுக்கு ஊட்டி விடுகிறார். மேலும் ஸ்ருதி மற்றும் ரோகிணிக்கு பாசத்துடன் உணவு ஊட்டுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television