உடம்பு முடியாத மீனாவை மிக கேவலமாக நடத்தும் விஜயா.! முத்து வைத்த மிகப்பெரிய ஆப்பு.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் மீனாவை விஜயா படாத பாடுபடுத்துகிறார். மனோஜ் – ரோகிணி அறையில் தூங்கிக் கொண்டிருந்த மீனாவை தரதரவென வெளியில் இழுத்து வந்து விடுகிறார். இதை பார்க்கும் முத்து கடுப்பாகி முக்கிய முடிவு ஒன்றை எடுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உடம்பு முடியாத மீனாவை மிக கேவலமாக நடத்தும் விஜயா.! முத்து வைத்த மிகப்பெரிய ஆப்பு.! 1

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயாவின் ஆணவப் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மீனா மற்றும் முத்துவை அவர் நடத்தும் விதம் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் உடல்நிலை சரியில்லாத மீனாவை முத்து மனோஜ் மற்றும் ரோகிணி அறையில் படுக்க வைத்துவிட்டு மாத்திரை வாங்குவதற்காக வெளியில் செல்கிறார். அப்போது அங்கு வரும் மனோஜ், மீனா தனது அறையில் படுத்திருப்பதை பார்த்து விஜயாவிடம் புகார் செய்கிறார்.

உடனே விஜயா அறைக்கு சென்று படுத்திருந்த மீனாவை தரதரவென வெளியில் இழுத்து வந்து விடுகிறார். பின்னர் சமைக்கும்படி அவர் மீனாவை திட்டிக் கொண்டிருக்க, கடுப்பான முத்து இனிமேல் மீனா அண்ணாமலைக்கு மட்டும்தான் சமைப்பார் .வேறு யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் தான் சமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற முடிவை எடுக்கிறார். இதனால் விஜயா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்