ஸ்ருதியுடன் வீட்டுக்கு வந்த ரவி.! முத்துவை வெளியில் அனுப்ப விஜயா செய்த சூழ்ச்சி.! ப்ரோமோ இதோ

வெளியிட்டது

விஜய் டிவியில் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அண்ணாமலையின் பேச்சை மீறி திருமணம் செய்து கொண்டு போன ரவி மீண்டும் வீட்டிற்கு வருகிறார். அந்த சமயம் வீட்டில் இருந்து முத்துவை எப்படியாவது வெளியேற்றிவிட விஜயா படாத பாடுபடுகிறார். ஆனால் அந்த சமயம் பார்த்து ரவி, ஸ்ருதி மற்றும் அவரது தாயார் வந்து விடுகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலையின் கடைசி மகனாக இருக்கும் ரவி ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் இது அண்ணாமலைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதியுடன் வீட்டுக்கு வந்த ரவி.! முத்துவை வெளியில் அனுப்ப விஜயா செய்த சூழ்ச்சி.! ப்ரோமோ இதோ 1

ரவியின் இந்த செயலால் மனமுடைந்து போன அண்ணாமலைக்கு இதய அறுவை சிகிச்சையும் நடக்கிறது. தன் தந்தை நிலைக்கு ரவியின் இந்த செயல்தான் காரணம் என்று சொல்லி முத்து, ரவி மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில், ஸ்ருதியின் தாயார் விஜயாவிற்கு ஃபோன் செய்து நாங்கள் இன்று என் மகளை கொண்டு வந்து உங்கள் வீட்டில் விடுறோம், ஆனால் முத்து அந்த சமயம் வீட்டில் இருக்கக் கூடாது என்று கூறுகிறார். எனவே விஜயா முத்துவை வெளியில் அனுப்பப்படாத பாடுபடுகிறார். இருப்பினும் முத்து வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுகிறார். அந்த சமயம் ரவி தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

அப்போது ரவியை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு முத்து கோபத்தில் கத்துகிறார். ஆனால் அண்ணாமலை கொஞ்சம் அமைதியாக இருக்குமாறு முத்துவை சமாதானம் செய்கிறார். இதனால் அண்ணாமலை ரவியை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கிம் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்