விஜய் டிவியில் டாப் ஹிட் தொடராக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. பல நாட்களாக எலியும் பூனையுமாக வாழ்ந்து வந்த முத்துவும் மீனாவும் தற்போது மீண்டும் இணைந்து வாழத் தொடங்கி இருக்கின்றனர். அதேபோல மனோஜ் மற்றும் ரோஹிணி இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தை ஆதரிக்கும் முத்துவின் தாயார் விஜயாவுக்கு ரோஹிணியின் உண்மை முகம் எப்போது தெரிய வரும் என்கிற ஆர்வத்துடன் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்து மீனாவிடம் வந்து ரவி எங்கே போய்விட்டான்? நிச்சியம் நின்று விட்டதால் சோகமாக இருக்க வேண்டாம் என்று சொல்லு, அம்மா பணத்தை மட்டும்தான் பார்ப்பாங்க, அப்பா தான் நல்ல பொண்ணா? நல்ல குடும்பமா? என்று பார்ப்பாரு இதை அவனிடம் சொல்லிவை எனக் கூறுகிறார். இது ஒருபுறம் இருக்க மீனா வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு ரவியை காதலிக்கும் ஸ்ருதி வந்து ரவியும் தானும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் விஷயத்தை கூறுகிறார். எங்களை நீங்கள் தான் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை மீனா குடும்பத்தாரிடம் சொல்லி எப்படி சேர்த்து வைக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television