ரோகிணியின் அம்மாவையும் மகனையும் வீட்டுக்கே அழைத்து வந்த முத்து.! இது என்ன புது ட்விஸ்ட்?

வெளியிட்டது

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் தாயாரை தற்போது முத்து தங்களது வீட்டுக்கே அழைத்துச் சென்றிருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் டிவியின் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல். ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களில் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த இந்த சீரியல், மக்களின் மனம் கவர்ந்த தொடராக மாறிப் போயிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரோகிணியின் அம்மாவையும் மகனையும் வீட்டுக்கே அழைத்து வந்த முத்து.! இது என்ன புது ட்விஸ்ட்? 1

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரோகிணியின் தாயார் ஊருக்கு செல்வதற்காக கேப் புக் செய்கிறார். அந்த கேப் டிரைவராக முத்து வருகிறார். அப்போது முத்து உங்களைப் பார்த்தால் மீனா மிகவும் சந்தோஷப்படுவார் நான் உங்களை எங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி ரோகிணியின் தாயாரையும் ரோகிணியின் மகனையும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் முத்து. இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் ஸ்ருதி ரவியிடம் வந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். தனக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். அவனுடன் ஷாப்பிங் செல்ல தன்னை வற்புறுத்துகிறார்கள்.

எனவே நீ சீக்கிரம் ஒரு முடிவெடு என்று சொல்லி ரவியிடம் கூறிவிட்டு செல்கிறார். இப்படியாக இந்த ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்