‘சிறகடிக்க ஆசை’ சீரியல் ரோகிணியின் கணவரை பார்த்து இருக்கீங்களா? முதல்முறையாக வெளிவந்த புகைப்படம்..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் ‘சிறகடிக்க ஆசை’. இதில் முத்து – மீனா, மனோஜ் – ரோகிணி, ரவி – ஸ்ருதி என்று மூன்று அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் குறித்த கதையாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

'சிறகடிக்க ஆசை' சீரியல் ரோகிணியின் கணவரை பார்த்து இருக்கீங்களா? முதல்முறையாக வெளிவந்த புகைப்படம்..! 1
கடந்த சில நாட்களாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இந்த சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு ஊருக்கு சென்றுள்ள குடும்பத்தினர் தற்போது போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் ரோகிணியின் மாமாவாக நடித்துக் கொண்டிருக்கும் பிரவுன் மணி மாட்டுவாரா? இல்லையா? என்பது குறித்து விறுவிறுப்புடன் கதை நகர்ந்து வருகிறது. இதில் ரோகிணி குறித்த உண்மைகள் எப்போது தெரிய வரும்? என்கிற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சல்மா, தன்னுடைய கணவரின் புகைப்படத்தை முதன்முறையாக பகிர்ந்திருக்கிறார். கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

10 வருடங்களாக தனக்கு பக்க பலமாக இருந்து வரும் தனது கணவருக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்