‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.! சின்னத்திரை டூ வெள்ளித்திரை.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில்ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.! சின்னத்திரை டூ வெள்ளித்திரை.! 1

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் அண்ணாமலை, விஜயா, முத்து, மீனா, மனோஜ், ரோகிணி, ஸ்ருதி, ரவி என எட்டு முக்கிய கதாபாத்திரங்கள் நடித்த வருகின்றனர். மேலும் இவர்களுடன் துணை கதாபாத்திரங்களாக பலரும் நடித்து அசத்தி வருகின்றனர்.

எதார்த்தமான குடும்ப கதையையும்,அதற்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளையும் அழகாக எடுத்துக்காட்டி வருகிறது இந்த சீரியல். விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் மீனாவின் தங்கையாக சீதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் சங்கீதா லியோனி. இவர் ஒரு மருத்துவர் ஆவார்.

இருப்பினும் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக நடிக்கத் தொடங்கிய அவர் தற்போது வெள்ளி திரையில் அறிமுகமாக இருக்கிறார். அவர் நடிக்க இருக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்

இந்த சீரியலில் சீதா என்கிற கதாபாத்திரத்தில் மீனாவின் தங்கையாகவும், குடும்ப பொறுப்பை உணர்ந்த கதாபாத்திரத்திலும் நடித்து வரும் சங்கீதா, நிஜத்தில் ஒரு பல் மருத்துவர். சின்னத்திரையில் தொடங்கிய தற்போது வெள்ளி திரைக்கு சென்றிருக்கிறார்.

அவர் நடிக்கவுள்ள படத்திற்கு ‘குற்றம் புதிது’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரஜித் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சங்கீதா நடிக்க இருக்கும் செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்