சொந்த வீட்டிலேயே பணத்தை திருடிய மனோஜ்.! கையும் களவுமாக பிடித்த முத்து.! முழிக்கும் விஜயா.!

வெளியிட்டது

சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மீனாவின் தம்பி மீது வீட்டிலிருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை திருடி விட்டான் என்று சொல்லி விஜயா அபாண்டமாக பழி போடுகிறார். ஆனால் அந்த பணத்தை திருடியது மனோஜ் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. முத்து மனோஜை கையும் களவுமாக பிடித்து விஜயாவிடம் கொடுக்கிறார். அப்போது மீனா இப்போது போலீசை அழைத்து உங்கள் மகனைப் பிடித்துக் கொடுங்கள் என்று கோபமாக பேசுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களிலேயே டிஆர்பி யின் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சொந்த வீட்டிலேயே பணத்தை திருடிய மனோஜ்.! கையும் களவுமாக பிடித்த முத்து.! முழிக்கும் விஜயா.! 1

இந்த வாரம் வெளியாகி இருக்கு ப்ரோமோவில் அண்ணாமலை கொடுத்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை காணவில்லை என்று விஜயா வீட்டில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது மீனாவின் தம்பி வந்து சென்ற பிறகுதான் பணம் காணவில்லை எனவே அவன்தான் எடுத்திருப்பான் என்று சொல்லி மீனாவிடம் விஜயா கத்திக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் மீனாவின் தம்பி நான் பணத்தை எடுக்கவில்லை வீணாக என் மீது பழி சுமத்தாதீர்கள் என்று சொல்ல தான் போலீசுக்கு போக போகிறேன் என்று விஜயா கூறிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் மனோஜ்க்கு ஒரு கவர் வருகிறது. அந்த கவரை வாங்கி முத்து பிரித்துப் பார்க்கிறார்.


அப்போது அண்ணாமலை ஒரு லட்ச ரூபாய் பணம் வைத்திருந்த கவர் தான் அது என்பது தெரிய வருகிறது. அப்போது முத்து உங்கள் மகன் தான் பணத்தை திருடி இருக்கிறான் என்று சொல்லி விஜயாவிடம் கூறுகிறார். அப்போது மீனா இப்போது போலீஸ் ஸ்டேஷன் போகலாமா அத்தை என்று கேட்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்