வீட்டுப் பொறுப்புகளை மீனாவிடம் கொடுத்து விஜயாவுக்கு தரமான ஆப்பு அடித்த அண்ணாமலை.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பணத்தை கொடுத்து வீட்டு பத்திரங்களை மீட்டு வரும் அண்ணாமலை அதை விஜயாவிடமிருந்து பறித்து மீனாவிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். இந்த பத்திரங்களை பத்திரமாக உனது அறையில் வைத்து பூட்டி விடுமாறு அவர் கூறுகிறார். அப்போது அங்கு வரும் விஜயா விரைவில் உன் ஆட்டத்தை அடக்குகிறேன் என்று சொல்லி மீனாவிடம் சவால் விட்டு விட்டு செல்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டுப் பொறுப்புகளை மீனாவிடம் கொடுத்து விஜயாவுக்கு தரமான ஆப்பு அடித்த அண்ணாமலை.! 1

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா தனது மூத்த மகனுக்காக வீட்டு பத்திரங்களை யாருக்கும் தெரியாமல் அடமானம் வைத்து பணத்தை மகனுக்கு கொடுக்கிறார். மேலும் பணத்தை சரியாக திரும்ப செலுத்தாததால் பைனான்ஸ் நிறுவனம் வீட்டிற்கு வந்து சண்டை போடுகின்றனர். பின்னர் பணத்தை திரும்பி செலுத்த சென்று கொண்டிருந்த சமயத்தில் மீனாவின் தம்பி வழியிலேயே பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடுகிறார். இதனால் விஜயாவை பைனான்ஸ் நிறுவனம் அறையில் வைத்து பூட்டி விடுகிறது. விஷயத்தை கேள்விப்பட்டு வரும் குடும்பத்தினர் அனைவரும் கையெழுத்து போட்டு விஜயாவை மீட்டு செல்கின்றனர். மேலும் பணத்தை செலுத்தி பத்திரத்தை மீட்டு வருகின்றனர்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பத்திரத்தை மீனாவிடம் கொடுத்து உனது அறையில் வைத்து பூட்டிக் கொள்ளுமாறு அண்ணாமலை கூறுகிறார். இதனால் கடுப்பான விஜயா இன்னும் சில நாட்களில் உன்னுடைய ஆட்டத்தை அடக்குகிறேன் என்று சொல்லி சவால் விட்டு செல்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்