ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைரன்’ படத்தின் HD புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தற்போது அந்தோணி பாக்யராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் சைரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்து வருகிறார். இவர் ஜெயம் ரவியின் மாமியார் ஆவார். ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த அடங்கமறு பூமி போன்ற படங்களை தயாரித்திருக்கிறார் சுஜாதா.
படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவியுடன் இணைந்து யோகி பாபு, சமுத்திரகனி போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை செல்வகுமார் மேற்கொண்டுள்ளார்.
சிறைக் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி சிறையிலேயே ஒர்க்அவுட் செய்வது போலவும், பின்பு டான் போன்ற லுக்கில் வலம் வருவது போலவும், இறுதியில் கையில் ஒரு பட்டாகத்தியும், மற்றொரு கையில் விலங்குடனும், பிகில் ராயப்பன் மற்றும் கைதி இரண்டு கலந்த கலவையான ஒரு லுக்கில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருப்பது போன்ற வீடியோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர்.
மேலும் ட்ரைலர், டீசர் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.