அண்மையில் வெளியான “டான்” படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வெற்றி படமாக அமைந்துள்ளது. கடந்து ஆண்டு வெளியான “டாக்டர்” படம் மிக பெரிய வெற்றி பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படமும் இப்பொது வெற்றி பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சிவிங்கி, பாலா என பலர் நடிப்பில், அனிருத் இசையமைத்து சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் முதல் பாதி சில நெகடிவ் விமர்சங்கள் பெற்றாலும், கடைசி 30 நிமிடங்கள் படம் பார்த்த அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழ வைத்தது. சமுத்திரக்கனியின் நடிப்பும், சிவகார்த்திகேயனின் நடிப்பும் கடைசி கட்டத்தில் அனைவரது உள்ளங்களையும் ஜெய்துள்ளது.
படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில், படம் கிட்டத்தட்ட 70 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. தொடர்ந்து வளர்ந்து வரும் சிவாவிற்கு இந்த படத்தின் வெற்றி மிக முக்கியமாக பார்க்க படுகிறது. நீண்ட நாட்களாக ஒரு சிறப்பான படத்திற்கு காத்திருந்த ரசிகர்கள் இந்த படத்தை நன்றாக வரவேர்த்துள்ளனர்.
இப்போது படத்தின் வெற்றி விழாவை சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியுடன் சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் கொண்டாடினர். அப்போது இந்த படம் கொரோனா காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்கு உதவி புரிந்த இந்த கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி கூறினார்.
பிறகு உடனே அங்கிருந்தவர்கள் ஒரு பாடலுக்கு சிவாவை அட அழைக்க “டான்” படத்தில் வரும் ஜலபுல ஜங்கு பாடலுக்கு அங்குள்ள மாணவர்களுடன் சந்தோசமாக நடனம் ஆடினார் சிவகார்த்திகேயன்.