படத்துல எல்ல எமோஷனும் இருக்கும்!!ஆனா ஏன் இருக்குனு கேக்காதீங்க!!!டான் படத்திற்கு ப்ளூ சட்டை மாறனை போல சிவகார்த்திகேயன் செய்துள்ள ரிவியூ வீடியோ.

வெளியிட்டது

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் “டான்”. சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில்,சிவாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன்,பாலா,எஸ்.ஜே.சூர்யா,சிவிங்கி என பலர் நடித்து அனிருத் இசையில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.Video Link Below.

படத்துல எல்ல எமோஷனும் இருக்கும்!!ஆனா ஏன் இருக்குனு கேக்காதீங்க!!!டான் படத்திற்கு ப்ளூ சட்டை மாறனை போல சிவகார்த்திகேயன் செய்துள்ள ரிவியூ வீடியோ. 1

எப்போதும் போல் தன ஸ்டைலில் ரிவியூ செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், இது சரியில்ல அது சரியில்ல என கோரி விமர்சித்துள்ளார். என்றாலும் கூட படம் உண்மையில் ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களாக ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷனிற்கு தனியார் பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட போது, நெறியாளர் உங்க படத்தை நீங்களே ரிவியூ சொல்லுங்க என கேட்க, சிவா உடனே மாறனின் குரலில், “இந்த சம்மருக்கு இது ஒரு நல்ல படம், படத்துல எல்ல எமோஷனும் இருக்கு, ஆன இருக்குனு கேக்கதீங்க” என கூறி படத்தை மாறனின் குரலில் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நல்ல மிமிகிரி ஆர்டிஸ்டும் கூட என்பதால் எளிதாக அந்த குரல்களில் பேசுவது அவருக்கு கை வந்த கலை. இப்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்