Categories: சினிமா

சிவாங்கி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்..! திக்குமுக்காடி போன ரசிகர்கள்..!

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது குரலால் அனைவரையும் கட்டி போட்டு இருந்தார். இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அனைவரையும் சிரிக்க வைத்து இருந்தார்.

சிவாங்கி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்..! திக்குமுக்காடி போன ரசிகர்கள்..! 1

பின்னர் இதே நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்து அனைவரையும் அசத்தி இருந்தார். தற்போது டான் படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி உள்ளார் சிவாங்கி. மேலும் தொடர்ந்து பல ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார் இவர். மேலும் பல படங்களில் சிவாங்கி ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தீபாவளிக்காக எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் அவரின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. அனைவரும் அசந்து அவர் புகைப்படங்களை பார்த்து வருகின்றனர். மேலும் சிவாங்கி நாயகி போல் மாறிவிட்டதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்