சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளில் மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தவர்கள் வரிசையில் மணிமேகலையும் ஒரு முக்கியமான குறிப்பிடத்தக்க நபர் என்றால் அது மிகையாகாது! 10 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பிரபல தொலைக்காட்சிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே! சில வருடங்களுக்கு முன்பு ஹுசைன் என்பவரை காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறியும் கரம் பிடித்தார்! பிறகு வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து தற்போது இவர் குக் வித் கோமாளியில் பங்கேற்று இன்று மக்கள் மனதில் பெரிய இடத்தில் இருக்கிறார்.

அதேபோல் குக் வித் கோமாளியில் நம் அனைவருக்கும் பிடித்தமானவர் என்றால் அது ஷிவாங்கி தான். முதலில் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட அவர் பிறகு கோமாளியாக அறிமுகமானார். அவரின் குரல் பாடும் போதும் பேசும் போதும் வித்தியாசமாக இருந்ததால் விமர்சிக்கபட்டார். அனால் குக் வித் கோமாளி வந்த பிறகு இவருக்கு செல்வாக்கு உயர்ந்தது. இவர் செய்யும் பல குறும்பு வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். Youtube Video Code Embed Credits: Tamilwoods TV
ஷிவாங்கி மற்றும் மணிமேகலை இருவரும் நல்ல நண்பர்கள். இன்னும் சொல்ல போனால் ஷிவாங்கியை மணிமேகலை தனது சொந்த சகோதரி போன்று பார்க்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர்கள் இருவரும் தற்போது பெங்களூர்க்கு tour சென்றுள்ளனர். அங்கு ஊரை சுற்றிப் பார்க்க சென்ற அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார். இதை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..